திருச்சியில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து

திருச்சியில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே மினியூர் கிராமத்தில் இருந்து கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதற்காக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பள்ளி மாணவர்கள் வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் கனமழையின் காரணமாக யானைகள் பிரிவு சாலையில் வந்த வாகனங்கள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மினியூர் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் நவீன் குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் ஒரு எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கலைச்செல்வன் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செல்வராஜ் என்பவருக்கு பலத்த காயத்துடன் தற்பொழுது மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவில் பெய்ய தொடங்கிய மழை இன்றும் தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தொடர் மழையிலும் பள்ளிக்குச் சென்ற மாணவன் விபத்துக்குள்ளானது பெற்றோர்கள் மத்தியில் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision