இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மூலம் 119க்கும் மேற்பட்ட பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு (Junior assistant (Fire service)-SRD, Junior assistant (office), Senior assistant (Electronics) மற்றும் senior Assistant (Accounts) (20.12.2023) அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ (Diploma in Mechanical / Automobile /Fire / Electronics/ Telecommunication/ Radio Engineering), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 30 வயதிற்குட்பட்ட தகுதியுடைய வேலைநாடுநர்கள் www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் (27.12.2023) முதல் (26.01.2024) வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் இப்பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision