ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (1 பணியிடம்) : தொகுப்பூதியம் ₹.11,916 (ஒரு மாதத்திற்கு), 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்படிவத்தினை www.tituchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்படிவங்கள் ஜூலை 6ம் தேதி மாலை 5:30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சி-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றுகளின் நகல், சுய சான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல். மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision