திருச்சியில் நாளை (18.09.2021) மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (18.09.2021) மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருச்சி துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதாக நாளை (18.09.2021) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்வரும் பகுதிகளுக்கு மின்சார வினியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரோடு, ராஜா காலனி, கல்லாங்காடு, குமரன் நகர், கனரா பேங்க் காலனி, சீனிவாசநகர், ராமலிங்க நகர், கீதா நகர், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, வாலாஜா தெரு, சண்முகா நகர், ரெங்கா நகர், வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாண்டமங்கலம், பாத்திமா நகர், நாச்சியார் கோயில் தெரு, முதலியார் சத்திரம், காஜா பேட்டை, அம்மையப்ப பிள்ளை நகர், எம்எம் நகர், வயலூர் மெயின் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர், சோழிங்கநல்லூர்,

புராமினேட் ரோடு, கண்டித் தெரு, கான்வென்ட் ரோடு, ஜங்ஷன் ரோடு மற்றும் பாரதியார் சாலை, பெரிய மிளகுபாறை, பொன்னகர், செல்வ நகர், ஆர்எம்ஸ் காலனி, கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மின் தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்த தகவல்களுக்கு 1912 அல்லது 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn