முதலமைச்சர் விருதுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல்
முதல்-அமைச்சர் விருதுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம், என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
ஆண்டு தோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் விளைாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண் வீரர், வீராங்கனைகள், 2 சிறந்த பயிற்சியாளர்கள், 2 சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், தங்கப்பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இதுதவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நிர்வாகி, ஒரு நன்கொடையாளர், நடுவர் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு அவர்களது 2 ஆண்டு செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான வழிமுறைகள் www.sdat.gov.inஎன்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO