அரசு சுவரில் அட்டூழியம் - கஷ்டப்பட்டு வரைந்த கைவினைக் கலைஞர்கள்?

அரசு சுவரில் அட்டூழியம் - கஷ்டப்பட்டு வரைந்த கைவினைக் கலைஞர்கள்?

திருச்சியில் பல இடங்களில் இன்று நாடாளுமன்றமே, பாராளுமன்றமே, அன்பே அமுதே என பல இடங்களில் பிறந்தாள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Advertisement

இதில் திருச்சி பாலக்கரை மேம்பாலத்தினை மாநகராட்சி மூலம் கைவினைக் கலைஞர்கள் கொண்டு அதனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களும் வரைந்து பாலத்திற்கு கீழே பூங்காக்களை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

அரசு சுவர் என்று கூட பார்க்காமல் வரையப்பட்ட ஓவியங்களின் மீது பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. பிறந்த நாள் கொண்டாடலாம், ஆனால் அதற்கு கஷ்டப்பட்டு வரைந்த ஓவியர்களின் கைவண்ணத்தை கலைப்பதா? உடனடியாக இந்த போஸ்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.