திருச்சியில் கிலோ ஆயிரம் ரூபாயைத் தொட்ட மல்லிகைப்பூ

திருச்சியில் கிலோ ஆயிரம் ரூபாயைத் தொட்ட மல்லிகைப்பூ

பண்டிகை காலம் என்றாலே பூக்களின் விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. 

 திருச்சி காந்தி மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  

இன்றைய நிலவரப்படி பூக்களின் விலை விபரம் பின்வருமாறு (கிலோ ஒன்றுக்கு)

மல்லிகைப்பூ- 1000ரூபாய் 

முல்லை பூ- 1000 ரூபாய்

ரோஜாப்பூ- 200 ரூபாய்

சம்மங்கி பூ -50 ரூபாய்

செவ்வந்தி- 120 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக பூக்கள் வாங்க வருவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn