வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

வருமான வரித்துறை சார்பில்  விழிப்புணர்வு கூட்டம்

மணப்பாறை திருச்சி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் திருமதி. புவனேஸ்வரி, தலைமையிலும், வருமான வரித்துறை துணை ஆணையர் திரு.கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்

வருமான வரித்துறை அதிகாரிகள் ஜான் ரசல், வள்ளியம்மை, நுகர் பொருள் விற்பனையாளர் சங்க தலைவர் முகமது அனிபா, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மெய்யப்பன், மளிகைக்கடை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஸ்ரீதர், செயலாளர் ரவி, நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜோசப், மற்றும் அடகுக்கடை உரிமையாள்ர்கள் மற்றும் வியாபாரிகள், வருமான வரித்துறை ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி பேசுகையில்.

வருமான வரியை முறையாக கணக்கிட்டு அந்த ஆண்டுக்குரிய வரியை முன் கூட்டியே செலுத்தலாம், செலுத்தும் வரியானது 4 - தவணைகளாக பிரித்து முன் கூட்டியே செலுத்தும் பட்சத்தில் வட்டி மற்றும் அபாராத வட்டியிலிருந்து விலக்கு பெற முடியும் என பேசினார்.

வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் பேசுகையில்:

இதேபோல் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் மற்றும் விற்கும் நபர்களின் கணக்கு வருமான வரித்துறைக்கு லிங்க் செய்யப்பட்டுள்ளதால் கணக்கை மறைக்க இயலாது.

இதனால் முறையாக கணக்கு சமர்பித்து அயாராத்தை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வரி சம்பந்தமான சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்  அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision