கேரளா ஹோட்டலை மூடக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தாலுகாவிற்கு அடையாளமாக உள்ளது எறும்பீஸ்வரர் கோயில். பல வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. எறும்பீஸ்வரர் மலைக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வருவதுண்டு.
இக்கோயிலை சுற்றி உள்ள கிரிவலப் பாதையில் புதிதாக கேரளா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் அசைவ உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி சமைத்து இங்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து இந்த கேரளா உணவகத்தை மூடக்கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எறும்பீஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் கேரளா உணவகம் திறப்பதற்கு தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோவில் கிரிவலப் பாதையில் திறக்கப்பட்டுள்ள கேரளா உணவகத்தை மூட வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த உணவகத்தை மூட உத்தரவிடக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆச்சரியம் நேரில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn