திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி - எம்எல்ஏவை விரட்டியடித்த பொதுமக்கள் பரபரப்பு

திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி - எம்எல்ஏவை விரட்டியடித்த பொதுமக்கள் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை வட்டம், எறையூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்கு சேகரிக்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வந்தபோது பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டியடித்தனர். பெரம்பலூர் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற சென்ற திமுக எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட பொதுமக்கள் கடுமையாக ஆபாச வார்த்தைகளால் திட்டி சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எறையூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் ஜீப்பை விட்டு வேட்பாளர் அருண் நேரு இறங்கி வந்து பொதுமக்களிடம் சென்று சமாதான பேச்சுவார்த்தை செய்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாக குறிப்பிட்டார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வயதான பெண்கள் மற்றும் உள்ளிட்டோர் அவரிடம் கேள்வி எழுப்பியவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள் குடிநீர் உள்ளிட்ட கூட இந்த கிராமத்திற்கு செய்து தரவில்லை என்று விலைவாசி ஏறி போச்சு என பெண்கள் கேள்வி எழுப்பினர். முக்கியமாக சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரப்புரை செய்த பொழுது எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று மீண்டும் பொது மக்களிடமிருந்து குரல் எழுப்பப்பட்டது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு தரப்பட உள்ளதாகவும் விரைவில் கிராமத்தில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் பரப்பரை செய்தவர் குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் பரப்பபுரை பாதியில் முடித்துவிட்டு அவர்கள் அப்பகுதியை விட்டு செல்லும் அளவிற்கு பொதுமக்களுடைய எதிர்ப்பு அங்கே இருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision