குடிபோதையில் தம்பியை கம்பியால் அடித்து கொன்ற அண்ணன் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி எம்டி சாலையை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருக்கு கோவிந்தராஜ், குமரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ் (52) துவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். குமரன் (43) துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டைலராக வேலை பார்த்துவந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் சமைத்து சாப்பிட்டு ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அப்படி சமைத்து சாப்பிடும் பொழுது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், குமரனை இரும்பு ராடால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குமரன் பறிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision