கே.உடையாபட்டியில் ஜல்லிக்கட்டு விழா-வாடிவாசலில் சீறிப்பாய்ந்துவரும் காளைகள்

கே.உடையாபட்டியில் ஜல்லிக்கட்டு விழா-வாடிவாசலில் சீறிப்பாய்ந்துவரும் காளைகள்

மணப்பாறை அருகே கே.உடையாபட்டியில் ஜல்லிக்கட்டு விழா.வாடிவாசலில் சீறிப்பாய்ந்துவரும் காளைகள்.வீரத்துடன் காளைகளை எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கே.உடையாபட்டியில் தூய பனிமாதா ஆலயம் முன்பு உள்ள திடலில்

 வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 700 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை தீரத்துடன் அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்று

 வாரியாக களம் இறக்கப்பட்டு வருகின்றனர். போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி வாகை சூடிய காளைகளுக்கும், காளைகளை திமிலைப்பிடித்து அடக்கி வெற்றி பெற்ற காளையர்களுக்கும் தங்கம் மோதிரம், வெள்ளி காசுகள், கட்டில், சைக்கிள், மிக்சி, மின்விசிறி, அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு விழாவில் 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision