வாய் பேச முடியாத கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம்

வாய் பேச முடியாத கணவனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம்தீர்ப்பு
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். அவரது மனைவி ரஹமத் பேகம். அவரைதிருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் ஷேக் தாவூத்திற்கு உடல்நிலை சரியில்லாத சொல்லி மாத்திரை வாங்கி வந்து கவனித்துக் கொள்வது போல் நடித்து
மருத்துவர் கொடுத்த மாத்திரையுடன் சேர்த்து அவரது கள்ளக்காதலன் அப்துல் அஜீஸ் கொடுத்த தூக்க மாத்திரைகளில் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தி அவரை மூச்சு விட முடியாத அளவிற்கு அழுத்தி பிடித்துக் கொன்றார். சிறிது நேரத்திலேயே ஷேக் தாவூத் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இயற்கையான இறந்து விட்டதாக எல்லோரும் நம்ப வைத்து சதி திட்டத்தின் படி ஷேக் தாவூத் உடல் நலம்
சரியில்லாமல் இருந்ததாக நம்ப வைத்து விட்டார். ஷேக் தாவூத் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அங்கு உள்ள அனைவரும் கூறியதால் போலீசார் விசாரணையில் குற்ற செயல்கள் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணையில்(04-06-21)அன்று அவரது மனைவி ரஹமத் பேகம் மற்றும் அவரது கள்ளக்காதலன் அப்துல் அஜீஸ் ஆகியோர் சேர்ந்து பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இது தொடர்பாக காந்தி மார்க்கெட்
போலீசார் வழக்கு பதிவு செய்து ரஹமத் பேகம் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது அந்த வழக்கில் இன்று நீதிபதி சுவாமிநாதன், கணவரை கொலை செய்த ரஹ்மத் பேகம் மற்றும் அவரது கள்ளக்காதலன் அப்துல் அஜீஸ் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி சக்திவேல் ஆஜராகி இருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision