பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இன்று முதல் நடைமுறை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இன்று முதல் நடைமுறை

தமிழக அரசின் உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் தினசரி வருகையை ஒழுங்குபடுத்தும் வகையில், அவர்கள் உரிய நேரத்தில் அலுவலகம் வந்து பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அறிமுகப்படுத்த

 வேண்டும் எனவும் இதன் மூலம் பணியாளர்கள் சரியான நேரத்தில் அலுவலக பணிக்கு வருகை புரிவது உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி இன்று 15ஆம் தேதி முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிரந்த பணிகளில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அலுவலக வேலை நாட்களில் பயோமெட்ரிக்

 வருகை பதிவு முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளின்படி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு பணி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆகும். நிரந்தர பணிநிலையில் பணிபுரியும் அனைவரும் அலுவலகத்திற்குள் நுழைய

 போகும் காலை 10 மணிக்குள்ளும் மாலை வெளியேறும் நேரமான 5. 45 மணிக்கு பின்பும் பயோமெட்ரிக் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக பேருந்துகள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision