இரயில் பெட்டியில் கஞ்சா போதை பொருட்களை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள்

இரயில் பெட்டியில் கஞ்சா  போதை பொருட்களை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள்

இன்று 30.04.2025 ம் தேதி ஹவுரா ( மேற்கு வங்காளம் ) To கன்னியாகுமரி செல்லும் T.no: 12665 ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா,

புகையிலை பொருட்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் ஆகிய பொருட்களுக்கு எதிராக திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய காவல்ஆய்வாளர் திருமதி ஷீலா அவர்களின் உத்தரவின் பேரில் 

WSSI.திருமதி.M. அபிராமி அவர்கள்,

SSI. திரு. சுப்பிரமணியன் அவர்கள்,

HC 1109 திரு.M. வீரமலை,

WHC.1165. திருமதி. N. ஜெயந்தி,

GR 1 852 திரு.N. சேகர்,

PC 1258 திரு. R. திவாகர், மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் சகிதம் இணைந்து வண்டியானது 02.30 am மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்து PF-4 ல் நின்ற சமயம் நடத்திய சோதனையில் பின்னால் உள்ள பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த வெள்ளை நிற கட்டை பையை எடுத்து

சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 02 கிலோ  கஞ்சா இருந்து உள்ளது. அவற்றை கைப்பற்றி திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து பின்னர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, திருச்சி. SSI. விஸ்வநாதன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision