திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் திடீர் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பேருந்து உடன் திடீர் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. அது கடந்த1ம் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.இந்நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் அருகே துவாக்குடி பாதையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கசாவடியில் கட்டண உயர்வு அமல் தற்போது இல்லை.
இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் தனியார் புறநகர் பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தை துவாக்குடி சுங்கச்சாவடி க்கு தனியார் பேருந்துகள் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ8 ஆயிரத்து 700 ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். என நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கட்டணத்தை சுங்கச்சாவடி நிர்வாகம் அதிரடியாக பல மடங்கு உயர்த்தி உள்ளது. ரூ8,700 இல் இருந்து ரூ10 ஆயிரத்து 190 ஆக உயர்த்தியதோடு 50 முறை சுங்கச்சாவடியை கடந்து சென்று வருவதற்கே இந்த கட்டணம் பொருந்தும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், காரைக்கால் வரை 18 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த பேருந்து உரிமையாளர்கள் இதற்கு இதற்கு கடும் அதிருப்தி வெளிப்படுத்தியதோடு மாதம் ரூ8700 என வசூலித்து வந்த சுங்க கட்டணம் தற்போது 50 நடைகளுக்கு 10 ஆயிரத்து 190 என்பது பல மடங்கு கண்டன உயர்வாகும். இந்த 50 நடை என்பது ஒரு வாரத்திற்குள் இயக்கப்பட்டு விடும் என்றும் அப்படி பார்க்க போனால் மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் இது தங்களுக்கு கட்டுப்படியாகாது.
அதனால் பழைய படியே சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும் கட்டணத்தை உயர்த்த கூடாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி வந்ததாகவும் ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தின் படி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கோரி தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியதோடு நோட்டீசும் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து துவாக்குடி அருகே உள்ள சுங்கச்சாவடியில் புதிய கட்டணம் ரீசார்ஜ் செய்யாததால் சுங்கச்சாவடி நிர்வாகத்தால்தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.அதற்கு ஓட்டுநர் நடத்துனர் புதிய கட்டண உயர்வு தங்களுக்கு கட்டுப்படியாகாததால் ரீசார்ஜ் செய்யவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது எந்த நிலையில் அந்த சுங்கச்சாவடியை கடக்க வந்த
தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து சுங்கச்சாவடிக்கை முற்றுகையிட்டு நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்து பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.சுமார்10 பேருந்துகள் வரை சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத்திற்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றதோடு அவருடன் துவாக்குடி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் இடமும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடமும் பேசினர் உடனடி தீர்வு எட்டப்படாததால் இருதரப்பினரையும்
துவாக்குடி காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வர அறிவுறுத்தி போக்குவரத்தை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் திருச்சி தஞ்சை போக்குவரத்து இயங்க நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision