திருச்சியில் இரண்டு நாள் முகாம் இடும் தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்(0 8 /05 /2025) அன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தர உள்ளார். 8/5/2025 மற்றும் 9/5/2025 ஆகிய இரு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
8/5/2025 அன்று காலை 11:30 மணி அளவில் திருவரம்பூர் அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் அரசு நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அது மட்டுமல்லாமல் தலைமை தபால் அலுவலகம் அரசு மருத்துவமனை நால்ரோடு தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் சென்றடைகிறார்.
அங்கு கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளார. பஞ்சப்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து ரூபாய் 236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுவார்.
அதன் பிறகு பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலையையும் திறந்து வைக்கிறார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையும் திறந்து வைப்பார் பின்னர் 48 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்.
அங்கு பொது மக்களுக்கான வசதிகளை பார்வையிடுகிறார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துக் என்று நகர நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision