சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனியில் வசித்து வரும் ஆறுமுகம்  என்பவர் காந்திநகர் பிள்ளையார் கோவில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருளின் விற்பனைக்காக வைத்திருந்தபோது

ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு குற்றவாளி மீதும் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.சமயபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட அப்பாதுரை கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட விக்னேஷ் ராஜேந்திரன் மற்றும்

பாலா  ஆகிய இருவரையும் சமயபுரம் காவல்  நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இக்குற்ற செயலில் ஈடுபட்ட  மூவர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 செல்வராகரத்தினம் அவர்கள் பரிந்துரத்தின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணைய பிறப்பிக்கப்பட்டு இன்று 29/4/2017 சிறையில் உள்ளவர்களிடம் சார்பு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 27 தடுப்பு காவல் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் சார்பு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision