காவிரி பாலம் 15 நாட்களில் திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் வட மாநிலத்தவர் கணக்கெடுப்பு பணி என்பது அரசியல், திருச்சியில் இதுவரையிலும் கணக்கெடுப்பு பணி இல்லை. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 4 முறை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிச்சயமாக ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும். திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் 15 நாட்களில் திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்கள் 81 ஏக்கர் இதுவரையிலும் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு பணி முழுமையாக நிறைவுபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை ஏக்கர், 1ஏக்கர் என கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மூன்று தினங்களில் முழுமையாக கணக்கெடுப்பு பணி முடிவடையும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn