சவாலான அறுவை சிகிச்சை - வெற்றிகரமாக முடித்த திருச்சி அரசு மருத்துவர்கள்

சவாலான அறுவை சிகிச்சை - வெற்றிகரமாக முடித்த திருச்சி அரசு மருத்துவர்கள்

திருச்சி பிராட்டியூரை சேர்ந்த கூலி வேலை செய்யும் தூய்மை பணியாளரின் 20 வயது மகள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் (02.10.2023) அன்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஏழு மாதங்களாக வாய்வழியாக உணவோ, தண்ணீரோ உட்கொள்ள முடியாமல் இருந்தது. அவர் 7 மாதங்களுக்கு முன்பு அமிலம் உட்கொண்டதால், உணவுக்குழாய் சுருக்கம் ஏற்பட்டு, அதற்காக எண்டோஸ்கோபி முறையில் உணவுக்குழாய் விரிவாக்குதல் (DILATATION) என்ற சிகிச்சையினை தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டிருந்ததாகவும், மாதாந்திர சிகிச்சைக்காக சுமார் 2-3 லட்சம் செலவு செய்திருந்ததாகவும் கூறினார். ஆகஸ்ட் மாதம், அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சில பரிசோதனைகள் செய்கையில், நெஞ்சுப்பகுதியில் உள்ள உணவுக்குழாய் விரிவாக்கத்தின் போது ஓட்டை விழுந்திருந்ததை கண்டறிந்தோம். உடனடியாக அவருக்கு நெஞ்சில் தங்கியிருத்த சலம் / கழிவுப்பொருட்கள் வெளியேற ஒரு குழாய் (ICD TUBE) போடப்பட்டது. 

மேலும், கி.வி அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர். பேரா.மரு.D.தேரு.. மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.E.அருண்ராஜ் வழகாட்டுதலின் படி, மரு.R.R.கண்ணன், மரு.கார்த்திகேயன், மரு.சங்கர், மரு.ராஜசேகரன், மரு.சுதாகர், மயக்கவியல் குழு மா.சக்கரேன், மரு இளவரசன் மற்றும் செவிலியர் சுமதி ஆகியோருடன் அமைத்த மருத்துவ குழுவுடன் அவரி உணவு உட்கொள்ள அறுவை சிகிச்சை செய்து வயிற்றுப்பகுதியில் சிறுகுடலில் ஒரு குழாய் (FEEDING JEJUNOSTOMY) பொருத்தப்பட்டது. அவரின் உடல்நிலை மேம்பட்டது. அவரால் வாய்வழியாக எதையும் சாப்பிட முடியாது, அவளது உமிழ்நீரை கூட விழுங்க முடியாது. அவருக்கு ஆகாரம் அனைத்தும் உடம்பு தேற வயிற்றில் பொருத்தப்பட்ட குழாய் வழியாகதான் செலுத்தப்பட்டது. அதற்கான பயிற்சியும் நோயாளிக்கே கொடுக்கப்பட்டது. உடம்பு பெரிய அறுவை சிகிச்சை தாங்கும் அளவிற்கு தேறியதும், (02.10.23) அன்று அவருக்கு முற்றிலும் சேதமடைந்த உணவுக் குழாயிற்கு மாற்றாக இரைப்பை அல்லது பெருங்குடல் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, இரைப்பை நல்ல முறையில் இருந்ததால், அதனை உணவுக்குழாயிற்கு மாற்றாக, ஒரு குழாய் வடிவில் 40 - 45cm நீளத்திற்கு உருவாக்கினோம்.

குழாய் வடிவில் உருவாக்கப்பட்ட இரைப்பையை நெஞ்செலும்பிற்கு பின் பகுதியில் முற்றிலும் புதிய பாதையிளை உருவாக்கி, அதனை கழுத்து வரை எடுத்துவத்து, தொண்டைப்பகுதியில் மீதமிருந்த உணவுக்குழாயில் சேர்ந்துவிட்டோம். இந்த அறுவை சிகிச்சை செய்துமுடிய 7 மணி நேரமானது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டார்.அறுவை சிகிச்சை முடிந்து ஐந்தாம் நாள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இணைப்பு சரியாக இருந்ததை உறுதி செய்த பின்னர், முதலில் நிரவ உணவு கொடுக்கப்பட்டது. பின் படிப்படியாக திட உணவு கொடுக்கப்பட்டது, தற்போது அவர் 7 மாதங்களுக்குப் பிறகு உணவின் சுவை அறிய, வாய் மூலம் திட உணவு உட்கொள்கிறார். அவர் உணவு உட்கொள்ள முடியாத ஏக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் தீர அவ்வப்போது மனநல மருத்துவரின் ஆலோசனை கொடுக்கப்பட்டது. தற்போது, அவர் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அவருடைய உடல்நிலை தேறி, தன் வேலையை வேறொருவரின் உதவியின்றி தானாக இயல்பாக செய்ய முடிகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision