முதலமைச்சர் கோப்பை - கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

முதலமைச்சர் கோப்பை - கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

2024-25 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் (06.10.2024) முதல் (23.10.2024) வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான தொடக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார் .

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை 2024-25 விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுபிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து, கோ-கோ. சிறப்பு கையுந்துபந்து, வீல்சேர், டேபிள் டென்னிஸ் மற்றும் எறிபந்து போட்டிகள் (10.09.2024) முதல் (24.09.2024) வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் / குழு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 06 முதல் 23 வரை கீழ்காணும் நாட்களில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் 38 மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரா / வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளார்கள். இப்போட்டிகளுக்கான தொடக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடக்கி வைத்தார்  

கைப்பந்து போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான போட்டி இன்று தொடங்கி 11ம் தேதி வரையிலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி 11ஆம் தேதி தொடங்கி 16 ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கான கேரம் போட்டி 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களுக்கும் அரசு ஊழியர்களுக்கான கேரம் போட்டி 21, 22 ,23 ஆகிய மூன்று நாட்களுக்கும் நடைபெற உள்ளது .

இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் , மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் , சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், விளையாட்டுத்துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision