ஊரடங்கை மீறிய எல்பின் நிறுவனத்திற்கு சீல் – ஆட்சியர் அதிரடி!!

ஊரடங்கை மீறிய எல்பின் நிறுவனத்திற்கு சீல் – ஆட்சியர் அதிரடி!!

கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஐந்து பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் 147 பேர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்து நேற்று இங்கு கூட்டம் நடத்தியுள்ளனர். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் திடீரென அதிகமான பேர் குவிந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் (பொ) பாலமுருகன், கிழக்கு வட்டாட்சியர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தினை கலைத்து வெளியேற்றினர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் கிழக்கு வட்டாட்சியர் மோகன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எல்பின் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்திற்கு 45 லட்சம் தந்தால் 90 இலட்சமாக தருவதாக கூறி மோசடிப் புகார்களும், டெப்பாசிட் பணங்களை திரும்ப தருவதில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் எல்பின் நிறுவனத்தின் நிர்வாகிகள் ராஜா, ரமேஷ் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஊரடங்கு மீறியதற்காக எல்பின் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரமேஷ், ராஜா மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.