அரியாற்று கரை உடைப்பு - பயத்தில் திருச்சி மக்கள் திருச்சி பிராட்டியூர் பகுதியில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம்

அரியாற்று கரை உடைப்பு - பயத்தில் திருச்சி மக்கள் திருச்சி பிராட்டியூர் பகுதியில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம்

திருச்சி மாவட்டத்தை மணப்பாறை பகுதிகளில் நேற்று (06.12.2021) காலை பெய்த அதீத கன மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரியாற்றின் இரு கரையும் தொட்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து சென்றது. புங்கனூர் சந்தாபுரம் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட அதே பகுதியில் நேற்று (06.12.2021) மாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் திருச்சி மாநகர் பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளது. குறிப்பாக கருமண்டபம், பொன்நகர், இனியானூர், வர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

திருச்சியிலிருந்து மணப்பாறை மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சாலைகள் முழுவதும் பள்ளமாகிவிட்டது. ஒரு வழி போக்குவரத்து காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புகளை தொடர்ந்து மழை நீரானது சூழ்ந்து கொண்டே இருக்கிறது. நீரின் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

திருச்சி மணப்பாறை நெடுஞ்சாலை பகுதிகளில் தற்போது வெள்ள நீர் ஓடிக் கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் தங்களுடைய வாகனங்கள் பள்ளங்களில் சிக்கியதால் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்யுடன் உள்ளது. நீர்மட்டம் உயர்வதால் மாவட்ட அதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn