திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சிப்பணிகள் - மேலாண்மை இயக்குனர் நேரில் ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சிப்பணிகள் - மேலாண்மை இயக்குனர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெ. விஜயராணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெ.விஜயராணி, வண்ணம் ஆடையகம் மூலம் துணிகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திடும் வகையில் பயனாளிகள் தொழில் செய்யும் இடத்திற்கே சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கருப்பையா என்பவர் சுற்றுலா வாகனம் தொழில் செய்யு தாட்கோ மான்யத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் செய்து வருகிறார். தாட்கோ மூலம் ஆதிதிராவிட மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் பொருட்டு துறையூர் வட்டம் மதுராபுரி மலையம்மன் பயிற்சி நிறுவனத்தை ஆய்வு செய்தார். சண்முகம் என்பவர் சீட் கவர் தொழில் செய்ய தாட்கோ மான்யத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் செய்து வருவதையும், சுரேஷ் என்பவர் ஜவுளி தொழில் செய்ய தாட்கோ மான்யத்துடன் கூடிய கடன் பெற்று ஜவுளி தொழில் செய்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement
 
முன்னதாக திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிராமத்தில் தாட்கோ மூலம் கட்டப்பட்டு வரும் 200 பழங்குடியின மாணவர்கள் தங்குவதற்கான மாணவர் விடுதி,100 பழங்குடியின மாணவியர்கள் தங்குவதற்கான மாணவியர் விடுதி மற்றும் துறையூர் பகுதியில் 100 மாணவர்கள் தங்ககூடிய வகையில் புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ள நிலத்தினையும் ஆய்வு செய்தார். மேற்படி, ஆய்வின் போது சென்னை தாட்கோ பொது மேலாளர் (தொழில்நுட்பம்) அழகு பாண்டியன், திருச்சிராப்பள்ளி தாட்கோ மாவட்ட மேலாளர் சா.தியாகராஜன், தாட்கோ செயற்பொறியாளர் காதர்பாஷா, தாட்கோ உதவி மேலாளர் ஆ.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்