மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருச்சி மாவட்ட பழைய ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர், தனி வட்டாட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பாதுகாப்பு கிடங்கில் 16,076 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,பேலட் யூனிட்ஸ் 8,637, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3449-ம்,விவி பேட் இயந்திரம் 3990 உள்ளது.இவை ஏற்கனவே சீலிடப்பட்டு வைக்கப்பட்ட அதே நிலையில் உள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision