தமிழ்நாடு -பெரம்பலூர் கிரீன் பீல்ட் ரயில் பாதை- எம்பி அருண் வேண்டுகோள்

லால்குடி ரயில்வே நிலையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.மேலும் லால்குடியின் மூன்றாவது நடைமேடையை உயர படுத்த வேண்டும்.ரயில் எண் 16127 /16 128 சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 22661 /22662 சென்னை ராமேஸ்வரம்
சென்னை சேதி எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16916/ 16160 சென்னை மங்களூர் சென்னை மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் லால்குடியில் நின்று செல்ல வேண்டும். லால்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்விளக்கு அமைப்பு தர வேண்டும். அப்பாதுரை ஊராட்சியில் ரயில்வே
சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும். புள்ளம்பாடி பேரூராட்சி புள்ளம்பாடி திருமழபாடி சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.லால்குடி மணக்கால் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியை விரைவாக முடித்து தர வேண்டும்.பிச்சாண்டார் கோவில் ஊராட்சி கள்ளத்தெரு ஒன்றின் கீழ் அக்ரஹாரம் 2 மேலகலகாரம் 3 தேவதானம் வெள்ளாளர் தெரு 4 தச்சர் தெரு 5 ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் 200 ஆண்டுகளாக ரயில்வே கிராஸிங் இங்கே கடந்து நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருக்கும் இடுகாட்டுக்கு செல்வதற்கு இதுதான் பிரதான பாதையாக இருந்து வருகிறது. இரு வழி ரயில் பாதை அமைத்த பிறகு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி மேம்பாலத்தின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்பட வேண்டும். இன்று எம்பி அருண் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision