பஹல்காம்- கஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஜோ அருண் கடும் கண்டனம்

பஹல்காம்- கஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டம்.தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச வெளியிடும் கண்டன அறிக்கை.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்திருக்கின்றனர், பலர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளமுடியாத கோரச்செயல். 2019ல் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370ம் பிரிவு நீக்கப்பட்டதற்குப் பிறகு நடைபெற்றுள்ள மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது.
நமது நெஞ்சை உலுக்கும் பயங்கரவாதிகளின் இந்த படுபாதக செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த அற்புதமான மலைப்பகுதி சுற்றுலாத் தலமாக பஹல்காம் விளங்குகிறது. இங்கு வருகை புரிந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான படுமோசமான இத்தாக்குதல் மன்னிக்க முடியாத படுபாதகமான குற்றமாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலபேர் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர் என்பது பெருத்த வேதனையை அளிக்கின்றது.
இந்த காட்டுமிராண்டி தாக்குதலை இந்திய மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த ஆக்கப்பூர்வமான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். தவறிவிட்டது எனக் கேட்டுக் கொள்கிறோம். அருட்தந்தை சொ. ஜோ அருண் என்று கூறினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
ஷ
https://www.threads.net/@trichy_vision