“பணம் பொருள் அன்பளிப்பு எதையும் கொடுத்து எங்கள் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட வேண்டாம்” வாக்காளர்கள் அதிரடி:

“பணம் பொருள் அன்பளிப்பு எதையும் கொடுத்து எங்கள் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட வேண்டாம்” வாக்காளர்கள் அதிரடி:

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதவிகள் ஏலம் விடப்படுவது, ஓட்டுக்கு பணம், பொருட்கள், அன்பளிப்பு ஆகியவை வழங்கப்படுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் லால்குடி தாலுக்கா தாளக்குடி ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து லால்குடி செல்லும் சாலையோரத்தில் ஒரு பேனர் வைத்துள்ளனர்.

அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அன்பானவேண்டுகோள். நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்கள் பகுதி வாக்காளர்களுக்கு பணம் பொருட்கள் அன்பளிப்பு எதையும் கொடுத்து எங்கள் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட வேண்டாம். என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.”எங்களது ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

வாக்காளர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் வெற்றியை எப்படி தனதாக்கிக் கொள்வது என்று கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.