போதையற்ற தமிழ்நாடு - ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம்

போதையற்ற தமிழ்நாடு - ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம்

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் கள்ளச்சாராய மரணங்களும் அரங்கேறின. அந்த சமயத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தருபவர்கள் அல்லது போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக இருக்கலாம் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கல்லூரியில் படிக்க கூடிய மாணவர்களிடம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன் வைத்து இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி சட்டக்கல்லூரி கிளை தலைவர் கவின் ஆதித்யா தலைமையில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சூர்யா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் சட்டக் கல்லூரி கிளை செயலாளர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision