திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு. ஐ.டி.ஐ. இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (Bio-data). அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைநாடுநர்கள் (24.01.2025) அன்று வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision