திருச்சியில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.
திருச்சி மாநகரம் அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (Multispecialty) விரிவாக்க திட்டத்தின்கீழ் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் கட்டுமான நிறுவனத்திடம்,
அரசு மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு (Govt Hospital Police Station) புதியதாக ஒரு கட்டிடம் கட்ட தர வேண்டும்மென்று பொதுமக்கள் நலன் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு, மேற்கண்ட கட்டுமான நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மேற்படி கட்டுமான நிறுவனமானது ஏற்கனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துமனை காவல் நிலையம் இயங்கி வந்த இடத்திலேயே 1250 சதுரஅடியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், அரசு மருத்துவமனை சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களுக்கு புதிய காவல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (20.01.2025)-ந் தேதி நடைபெற்றது.
இதில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் V.சரவணன், திருச்சி மாநகர மேயர் அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்,
திராவிட முன்னேற்ற கழக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தனியார் கட்டுமான நிறுவன அலுவலர், காவல் உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision