திருச்சி அருகே வெடிவைத்து பாறையை தகர்த்த பொழுது முகம் சிதறிய சம்பவம் - வழக்கு பதிவு விசாரணை

திருச்சி அருகே வெடிவைத்து பாறையை தகர்த்த பொழுது முகம் சிதறிய சம்பவம் - வழக்கு பதிவு விசாரணை

திருச்சி மணப்பாறை பெருமாம்பட்டி சேர்ந்த சரவணண் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும்.நேற்று தனது வீட்டில் இருந்து பொய்கப்பட்டிக்கு முடி வெட்டுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது தனியாருக்கு(பத்தி பாஸ்கர்) சொந்தமான இடத்தில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தாமல் பாறைகளுக்கு கம்பரசர் மூலம் வெடி வைத்ததில் பாறை சிதறியதில் சரவணன் தலையில் பட்டு முன் பகுதியில் காயம் ஏற்பட்டதில் நிலை தடுமாறி  அருகில் கீழே விழுந்ததால்

(காயம் அடைந்த சரவணன் புகைப்படம்) இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்து மணப்பாறை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணனிடம் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பாறைக்கு வெடி வைத்ததில் காயம் பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணப்பாறை நகர அதிமுக துணை செயலாளர் பத்தி பாஸ்கர் மீது வெடி பொருட்கள் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision