கத்தி வைத்து மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த வழக்கு- பிரபல ரவுடி கைது

திருவெறும்பூர் அருகே வாலிபரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடியை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காந்திநகர் 4வது தெருவை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் இவரது மகன் பாண்டியன் (33) இவர்நவல்பட்டு சாலையில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த பிரபல ரவுடியான வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கோபால் (எ) குஞ்சு கோபால் (30) பாண்டியனிடம் இங்கு சரக்கு பிளாக்கில்
எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு பாண்டியன் தெரியாது என்று கூறியதாகவும் அதற்கு குஞ்சு கோபால் பாண்டியனிடம் காசுவைத்திருக்கிறாய் அல்லவா அதை எடுடா என பாண்டியனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாண்டியன் வைத்திருந்த ரூ 500 பணத்தை பறித்துக் கொண்டு குஞ்சு கோபால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.
இது சம்பந்தமாக பாண்டியன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குஞ்சு கோபாலை கைது செய்தனர் குஞ்சு கோபால் மீது ஏற்கனவே
கொலை, திருட்டு, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision