திருச்சி அருகே விவசாய சங்கம் போராட்டம்

திருச்சி அருகே விவசாய சங்கம் போராட்டம்

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி பேரூராட்சி அலுவலகம் முன்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமபுற வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி அந்தநல்லூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு வேலை வாய்ப்பு இல்லாமல் விவசாய தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்காக பலமுறை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தொடர் போராட்டங்களின் பலனாக பேரூராட்சி வீதம் நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ் ( 100 நாள்) வேலை என்ற பெயரில் தமிழக அரசு  ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து தற்சமயம் திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி பேரூராட்சியில் நகர்புற வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி சிறுமணி பேரூராட்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  அரசுக்கு கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

செயல் அலுவலர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது சுமார் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision