மலைக்கோட்டை டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

மலைக்கோட்டை டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

விவசாய விலைப் பொருட்ளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதிய வழங்க வேண்டும். மிக முக்கியமாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடகா அரசு மாதந்தோறும் திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும்.

மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியான இரண்டு மடங்கு லாபகரமான விலை ஏன் கொடுக்கவில்லை என வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் சன்னதி கோபுர டவரில் ஏறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஒரு கிலோ நெல் கோதுமை 18-க்கு பணி செய்ததற்கு 54 ரூபாய் தருவேன் எனக் கூறி 22 ரூபாய் தருவது நியாயமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் ஒரு டன் கரும்பு ரூபாய் 2700 விற்றதிற்கு 8,100 தருவதாக கூறிவிட்டு 3150 தருகிறார்கள். 500 கார்ப்பரேட் கம்பெனி வாங்கிய கடன் 14 லட்சம் கோடி தள்ளுபடி 95 கோடி விவசாயிகள் வாங்கிய ஒரு லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision