அழுகிய நெல் பயிற்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் அழுகிய நெல் பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision