காந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம் - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
திருச்சி காந்தி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை கடைகள் செயல்பட்டு வருகிறது. கோவிட் தொற்று 2வது அலை காரணமாக மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் கடந்த வாரமே பொன்மலை ஜி கார்னருக்கு மொத்த வியாபாரிகள் செல்ல வேண்டும் என அறிவித்தனர்.
தமிழக அரசு(10.05.2021) பத்தாம் தேதி முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட போதும் ஜி-கார்னர் செல்ல கேட்டுக்கொண்டனர் .ஆனால் தற்போது வரை காந்தி சந்தையிலேயே மொத்த விற்பனை சில்லறை விற்பனை அனைத்தும் நடைபெறுகிறது. பொதுமக்கள் வியாபாரிகள் அதிகமானோர் முகவசங்களை அணியாமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் காந்தி சந்தையில் உள்ளது காட்சிகளில் காணமுடிந்தது.
கடந்த ஆண்டு கோவிட் தொற்று ஏற்பட்ட பொழுது காந்தி சந்தையில் அதிகமானோருக்கு தொற்று வந்தது. அப்போது ஆட்சியர் காந்தி சண்டை இழுத்து மூடி சீல் வைத்தார் .தற்பொழுது மீண்டும் தமிழக அரசின் உத்தரவை மீறி வியாபாரிகள் கோவிட் தொற்று இரண்டாவது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதால் மீண்டும் காந்தி சந்தை கோவிட் தொற்று பரவலின் பிறப்பிடமாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd