மூன்று நாட்களாக சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்த முதியவர் மீட்பு
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகில்மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் சுயநினைவின்றி மயங்கி கிடக்கிறார். மாநகராட்சியில் சொல்லியும் பயன் இல்லை.108 ஆம்புலன்ஸ்க்கு சொல்லியும் நாங்கள் மருத்துவமனைக்கு கொன்டு செல்ல மாட்டோம் என்று கைவிரித்து விட்டனர் .
மனித உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா? என்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகத்துக்கு வாழும் கலை அமைப்பு மாவட்ட செயலாளரும் தண்ணீர் அமைப்பு நிர்வாகிருமான செல்வம் தெரிவித்து கே.சி. நீலமேகம், ஸ்ரீ ஃபவுண்டேஷனுக்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவித்தார்.உடனடியாக களத்தில் ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு சென்று பார்வையிட்டனர்.
சளி மற்றும் வாந்தி எடுத்து மிகுந்த துர்நாற்றத்துடன் அதன் மீதே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த முதியவரை ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு எவ்வித சங்கடமும் படாமல் அவரை காவல்துறை உதவியோடு மீட்டு உடலை சுத்தம் செய்து புத்தாடை மாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிகழ்வில் தகவல் தெரிவித்ததோடு நிற்காமல் ஒப்பற்ற ஒரு உயிரை காப்பாற்ற முழுவதும் உடன் இருந்து உதவிய மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் அவர்களுக்கும் கண்டோன்மென்ட் காவல் நிலைய அனைத்து காவலர்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் ஸ்ரீ ஃபவுண்டேஷன் சார்பாக நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொண்டனர். இது போன்ற நிகழ்வுகளை சாலையை பார்க்கும்போது மனிதம் மரித்து விட்டதா என்ற எண்ணம் வருகிறது . ஆனால் மனிதம் உயிரோடு தான் உள்ளது என இவர்கள் அனைவரும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் புரிய வைக்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn