பகுதிநேர நுண்கலை நடன பள்ளியில் நாட்டுப்புற நடன அரங்கேற்றம்

பகுதிநேர நுண்கலை நடன பள்ளியில்  நாட்டுப்புற நடன அரங்கேற்றம்

கலைக் காவிரி நுண் கலைக் கல்லூரியின் பகுதிநேர நுண்கலை நடனப் பள்ளியின் சார்பில் 6வது நாட்டுப்புற நடன அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி S.G.சாமிநாதன் அடிகள் தலைமை வகித்தார். கல்லூரியின் கல்வி நெறியாளர் அருள்பணி முனைவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சிவகங்கை மறைமாவட்டத்தைச் சார்ந்த சருகணி புது இதயம் அறக்கட்டளை நிறுவனர் இயக்குநர் அருள்தந்தை முனைவர் ஆரோன் மற்றும் சென்னை எழும்பூர் மறைவட்ட முதன்மை குரு அருள்பணி சந்தியாகு மற்றும் சென்னைப் பல்கலைக்கழக கிறிஸ்தவவியல் ஆய்வு மையத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஞானபேட்ரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 12 மாணவர்கள் நாட்டுப் புற நடனங்களை அரங்கேற்றம் செய்தனர்.முளைப்பாரி நடனம், பின்னல் கோலாட்டம், களியலாட்டம், மான்கொம்பு, கும்மி, தெம்மாங்குப் பாடல், காவடி ஆட்டம்,ஒயிலாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட நடனங்களை நிகழ்த்தினர்.

பகுதிநேர நடனப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்  பெனிட்டா பகுதிநேர நாட்டுப்புற நடனம் குறத்த அறிக்கை வாசித்தார்.அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அருள்பணி.ஆரோன்  மக்கள் கலையான நாட்டுப்புறக் கலையானது மக்களின் உணர்வில், வாழ்வில் பண்பாட்டில் இருந்து உருவானது.

வேளாண் சமூகத்தில் உழைக்கும் மக்களிடத்தில் இருந்து உருவான கலை இது.கலையை தனிமனித விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் பயன்படுத்த வேண்டும்.

கலை என்பது கடவுளுடன் மற்றும் நின்றுவிடாமல் காதலுடன் மற்றும் நின்று விடாமல் சமூக மாற்றத்திற்கும் அடினைத் தளத்திலிருந்து விடுதலை பெற்றுத் தரக்கூடியதாக மாற்றக்கூடியது. இக்கலையைஅவ்வாறே நாம் பயன்படுத்திட வேண்டும் என்றார், நாட்டுப்புற நடன பயிற்றுநர் R.V பாலா அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

முன்னதாக பகுதிநேர நடனப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குரலிசை உதவிப்பேராசிரியர் அதிசய பரலோகராஜ் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார், நிகழ்வை தொகுத்து வழங்கினார்.மாணவர்கள், பெற்றோர்கள் கலை ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO