அ.இ.அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேச்சு

அதிமுக மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம்கேட்கும் போது மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்தோம். அது அடிமையாக இருந்தது கிடையாது . தேவையை பூர்த்தி செய்ய யாருடன் இணக்கமாக செல்லவும் தயார், தேவைப்பட்டால் எதிர்க்கவும் தயார்.
இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நாங்கள் அரசியலுக்காக அதை செய்யவில்லை.திமுக அரசு மீது மக்களிடம் செல்வாக்கு குறைந்ததால் மும்மொழி கொள்கை பிரச்சனையையும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சனையையும் கொண்டு வந்து திசை திருப்புகிறார்கள்.
அனைத்து கட்சி கூட்டத்தில் கல்வி நிதி பிரச்சனை குறித்து திமுக பேச கூடாது. மும்மொழி கொள்கை குறித்தும் தொகுதி மறுவரை குறித்து மட்டும் தான் பேச வேண்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision