அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரங்களை வெட்டி கடத்த முயற்சி

முசிறி தொட்டியம் அருகே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 12 டன் எடை மரங்களை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேர் கைது - ஜேசிபி வாகனம், லாரி பறிமுதல்திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உன்னியூர் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பெரிய பள்ளிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இந்த நிலத்தில் உள்ள வேம்பு மற்றும் சீமை கருவேல மரங்களை மர்ம நபர்கள் சிலர் அனுமதி இன்றி சட்டவிரோதமாக வெட்டி லாரியில் ஏற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மலர்விழி இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து தொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீசார் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவாசகம், ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் மூலம் மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கரூர் மாவட்டம் கழுவூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி (34), சின்ன கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சிவசாமி (39), நாமக்கல் மாவட்டம் குமரிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (38), மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த மூர்த்தி (40) ஆகியோர் என்பதும், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் அரசு அனுமதி இன்றி ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 12 டன் எடை கொண்ட வேம்பு மற்றும் சீமை கருவேல மரங்களை வெட்டி லாரியில் ஏற்றி கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்து மரங்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி எந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision