போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார் ஆய்வாளர் - தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்நிலைப்பணிகள் உள்ளிட்ட பதவிகளுக்கான 750 பணிக் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இணையவழியில் (https://www.tnusrb.tn.gov.in/) (01.06.2023) முதல் (30.06.2023) வரை விண்ணப்பிக்கலாம். இப்போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn