மரம் நடு, முககவசம் பெறு அக்னி சிறகுகள் அமைப்பினரின் பசுமை சவால்

மரம் நடு, முககவசம் பெறு அக்னி சிறகுகள் அமைப்பினரின் பசுமை சவால்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அக்னிசிறகுகள் அமைப்பின் சார்பாக GOGREEN CHALLENGE என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு 3 அடுக்கு முக கவசம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அக்னிசிறகுகள் அமைப்பைச் சேர்ந்த மகேந்திரன் கூறியதாவது... உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  அக்னிச் சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக சில திட்டங்களை செயல்படுத்த இருக்கின்றோம்.

அதில் ஒன்றுதான் GO GREEN CHALLENGE
அதுமட்டுமின்றி திருச்சியில் திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கவும், முன் களப்பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் அன்றைக்கு மூலிகைச் செடிகளை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களுக்கும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்திட வேண்டும் என்பதற்காக Go Green Challenge அறிவித்துள்ளோம்.

ஏதேனும் பயன் தரக்கூடிய ஒரு மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை  ஜூன் 5ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ( Facebook, Instragram ) பக்கத்தில் Tag செய்ய வேண்டும். அக்னிசிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் மூன்று அடுக்கு முக கவசம் பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளோம்.

இந்த Go Green challenge மூலமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC