திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினம் (23.03 2025)அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம்

கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள்,போன்றவை இறுதி செய்து கிராம சபையின் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால்( 29.03. 2025) அன்று நடைபெற உள்ளது எனவே (29.03 2025 )அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம் சார்ந்து அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பனிப்பாறை பாதுகாப்பு என்கின்ற சிறப்பு கருப்பொருள், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து இலக்கினை அடைதல் கிராம ஊராட்சியில்( 1.04.2024 முதல் 28.02. 2025 )முடிய உள்ள கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கண்ட செலவின அறிக்கை கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது போன்றவற்றை கிராமசபையில் விவாதிக்கப்படும்என தெரிவிக்கப்படுகிறது. (29.03.2025) அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள

 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision