குற்ற செயல்களை தடுக்க காவலர்களுக்கு அதிவேக பைக்குகள்

குற்ற செயல்களை தடுக்க காவலர்களுக்கு அதிவேக பைக்குகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட  08+02 (pluzar)இருசக்கர புதிய வாகனங்களில் ஐந்து   உட்கோட்டங்களில் உள்ள தலா இரண்டு காவல் நிலையங்களுக்கு குற்ற செயல்கள் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து

தடுப்பதற்காகவும் மேலும் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து அலுவல் புரிவதற்காகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் அவர்கள் இன்று (1.04.2025 )காலை 11:30 மணிக்கு அப்பணிக்கு   ஒதுக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கினார்

மேலும் வழங்கப்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள் தற்சமயம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் தற்காலிகமாக( 1/04/2025 )முதல்  (9/ 04 /2025 )வரை தொட்டியம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  செல்வ நாகரத்தினம் அவர்கள் பதவியேற்றது முதல் ரவுடிகளை ஒடுக்கும் பொருட்டு 16 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தும் மேலும் 15  பேர்

மீது குண்டர்  தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு  திருச்சி மாவட்டத்தில் பேணிக்காக்கப்பட்டு வருகிறது. என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision