புனித ரமலான் பண்டிகை திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்!
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி, இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு ரமலான் தொழுகையில் பங்கேற்றனர். அந்த வகையில் திருச்சி மாரிஸ் பாலம் அருகே உள்ள கபூர் பள்ளிவாசல் ஈத் கா பள்ளி மைதானத்தில் அப்துல் ஹமீத் தலைமையில் ஹாஜி மொய்தீன் அஷ்ரத் முன்னிலையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision