விடுதி மாணவ - மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

விடுதி மாணவ - மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகா பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பொறியியல் விடுதி மாணவ மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேரும் பொழுது விடுதி கட்டணம் இல்லை எனக் கூறி கல்லூரியில் சேர்த்ததாகவும், தற்பொழுது விடுதிக்கு கல்லூரி நிர்வாகம் மாணவ - மாணவிகளை பணம் கட்ட சொல்லி நிர்பந்தப்படுத்துவதாகவும்,

மேலும் விடுதியில் தரமற்ற உணவு, தரமற்ற குடிநீர், சுகாதாரம், இல்லாத கழிப்பிட வசதி, மாணவிகளின் விடுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் கூறி திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் வட்டாட்சியர் சேக்கிழார் மற்றும் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் கல்லூரி சேர்மன் மற்றும் நிர்வாகத்தினர் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் மாணவர் மாணவிகள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக தொட்டியம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மாணவிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision