திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமிக்கு டெண்டர்
திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இரண்டு கட்டங்களாக மேம்படுத்தவுள்ள நிலையில், முதல் கட்ட மேம்பாட்டிற்காக டெண்டர் விடபட்டுள்ளது.
முதல் கட்டத்தில் நிலத்தை அகாடமிக்காக தயார் செய்யப்பட்டு, ஓட்டப்பந்தயம் மற்றும் கால்பந்திற்காக வெளிப்புற மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டிற்காக உட்புற மைதானம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நிர்வாகத்திற்கான வளாகத்துடன் தங்கமிடதுடன் கூடிய வசதிகள் முதற்கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளது.
150 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்பட உள்ள இந்த ஒலிம்பிக் அகாடமியில் தற்போது 50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் முதல் கட்டம் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒலிம்பிக் பயிற்சி அகாடெமிக்கான இடம் பஞ்சப்பூரில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இலந்தைப்பட்டிக்கு மாற்றப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision