திருச்சி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி பொன்மலைபட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவர் திருச்சி விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் பணிபுரியும் ரம்யா என்பவர் செல்லையா மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு புகார் அளித்தார். அப்போது இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த முருகேசன், செல்லையா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 5000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லையா திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (11.08.2009) அன்று முருகேசன், செல்லையாவிடம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்தனர்.பின்னர் முருகேசன் மீதான இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்று வந்தது. 

இன்று ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆய்வாளர் முருகேசன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இவர் தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO