4 நாட்கள் தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன் - அமைச்சர் உருக்கமான பேட்டி 

4 நாட்கள் தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன் - அமைச்சர் உருக்கமான பேட்டி 

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 33 மாணவிகள், 34 மாணவர்கள் என மொத்தம் 67 பேர் துபாய் நகரத்திற்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து சென்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில்  மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் மகேஸ் சென்றார். மேலும் மாணவர்களுடன் ஐந்து ஆசிரியர்கள் உட்பட அதிகாரிகள் சென்றுள்ளனர்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பேட்டி - பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். EWS இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிக சிறந்த பயணமாக அமையும். இந்த 4 நாட்கள் பயணத்தில் நான் அவர்களுக்கு தந்தையாகவும், தாயாகவும் இருப்பேன் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார்.ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார்.

அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது தெரியும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO